அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி குறித்து விசாரித்துவரும் இராணுவத்தினர்: குழப்பத்தில் ஊர்மக்கள்..!

Published By: J.G.Stephan

23 Jan, 2021 | 07:10 PM
image

சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணியை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுவத்தினர் எனக்கூறியோர் விசாரித்ததால் அங்குள்ள  மக்களிடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

அம்மன் ஆலய கேணியுள்ள காணியை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அபகரிக்கும் முயற்சியா என்ற அச்சம் ஊர்மக்களிடையே ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றுமாலை 5 மணியளவில் ஆலயத்துக்கு வந்த சிலர், பூசகரிடம் தம்மை காரைநகர் முகாமைச் சேர்ந்த படையினர் என அறிமுகப்படுத்தியுள்ளதுடன், குறித்த ஆலயத்துக்குச் சொந்தமான தீர்த்தக் கேணியையும்  அதனை அண்டியுள்ள அரச மரம் உள்ள நிலப்பகுதி தொடர்பில் கேட்டறிந்துள்ளனர்.

மேலும்,குறித்தக் கேணி, அரச மரம் உள்ள நிலப்பகுதி யாருக்குச் சொந்தமானதெனவும்  அவர்கள், பூசகரிடம் வினவியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பூசகரால் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனுக்கு இன்றுகாலை தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், அந்தப் பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளமையும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43