சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

23 Jan, 2021 | 03:04 PM
image

(செ.தேன்மொழி)


சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகுபவர்களின் தொகை குறைந்து வருகிறது. இன்று காலை 6 மணி வரை 8 தொற்றாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.


இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,


சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகிறது. இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 8 பேருக்கு மாத்திரமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த விளக்கமறியல் கைதிகளாவர்.


வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 5 அதிகாரிகள் உட்பட 139 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களில் 129 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 4228 பேர் குணமடைந்துள்ளனர்.  8 பேர் மாத்திரமே கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிறைச்சாலைகளில் 4377 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

134 சிறைச்சாலை அதிகாரிகள், 487 ஆண் கைதிகள் , 11 பெண் கைதிகள் , 3511 ஆண் விளக்கமறியல் கைதிகள்  , 234 பெண் விளக்கமறியல் கைதிகளுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


வெலிக்கடைச் சிறைச்சாலையில் 886 பேரும் , மெகசின் சிறைச்சாலையில் 868 பேரும் , மஹர சிறைச்சாலையில் 814 பேரும் , கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 434 பேரும் மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் 363 பேருமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08