ஜெனிவா சவால்களை எதிர்கொள்ள போகும் ஜனாதிபதியின் 'மாய ஆடை' குழு: பிமல் ரத்நாயக்க  

Published By: J.G.Stephan

23 Jan, 2021 | 10:33 AM
image

(நா.தனுஜா)
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் விசேட குழு, ஜெனீவாவில் அணிந்துகொள்வதற்கான ஒரு 'மெஜிக் ஆடை' மாத்திரமே என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் மூவரடங்கிய விசேட குழுவொன்றை நியமித்திருக்கின்றார்.

இதனை  மேற்கோள்காட்டி  தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவொன்றிலேயே பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

 'பேரரசரின் மெஜிக் ஆடைகள்' என்று தலைப்பிட்டிருக்கும் அவர், 'உங்களுடைய சட்டமா அதிபர் திணைக்களம் ஒரு கொலைக்குற்றவாளியான பாராளுமன்ற உறுப்பினரை விடுதலை செய்தது. நீங்கள் நீதித்துறையைப் பயமுறுத்துவதற்கு முயற்சிக்கின்றீர்கள். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீங்கள் பகிரங்கமாகவே அச்சுறுத்தல் விடுக்கின்றீர்கள்.

நீங்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை  அடக்கு முறைக்கு  உட்படுத்துவதோடு,  உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களை மீறி செயற்படுகின்றீர்கள். நீங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை வலுவிழக்கச் செய்திருக்கிறீர்கள். அனைத்தையும் நீங்கள் இராணுவ மயப்படுத்தியிருக்கிறீர்கள். இத்தகைய பின்னணியில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உங்களால் நியமிக்கப்பட்டிருக்கும் விசேட குழு என்பது ஜெனீவாவில் அணிந்துகொள்வதற்கான ஒரு மெஜிக் ஆடையைப் போன்றதேயாகும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59