கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை..!

Published By: J.G.Stephan

23 Jan, 2021 | 10:10 AM
image

(எம்.மனோசித்ரா)
நாட்டில் தற்போது நாளொன்று 900 ஐ அண்மித்தளவில் தொற்றாளர்கள் பதிவாகக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதே நிலைமை தொடருமானால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்போடு எதிர்வரும் இரு வாரங்களில் மரணங்களில் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும். எனவே நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏதேனுமொரு வகையில் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் நாட்டுக்கு பொறுத்தமானதுமான தடுப்பூசிகளையே பெற்றுக்கொள்ள வேண்டும். தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் போது அது தொடர்பான தீர்மானம் விஞ்ஞான பூர்வமானதாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் ரீதியானதாக இருக்கக் கூடாது என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் , நாளொன்றுக்கு அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலையில் தற்போது நாம் இருக்கின்றோம். எனவே எதிர்வரும் இரு வாரங்களில் நாளொன்றில் அதிகளவான மரணங்கள் பதிவாகக் கூடும். வியாழனன்று 900 ஐ அண்மித்தளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவ்வாறெனில் சிகிச்சை பெறும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51