இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சம அந்தஸ்த்தை வழங்கி இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காணும் விதத்திலான புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்படும் என  தெரிவித்த அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல, 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே தேசிய அரசாங்கத்தின் முதன்மைக் கொள்கையாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

சப்ரகமுவ மாவட்டத்தில் நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டங்களை அண்மையில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு கூறினார்.