சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இரு வாரங்களுக்கு மேல் ஆகலாம் - சீனா

Published By: Vishnu

22 Jan, 2021 | 12:03 PM
image

நூற்றுக்கணக்கான மீற்றர் நிலத்தடியில் சிக்கியுள்ள சுரங்கத் தொழிலாளர்கள் குழுவை மீட்பதற்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் செல்லலாம் என சீன மீட்புக் குழுக்கள் கூறுகின்றன.

சீனாவின் கிழக்கு கடற்கரை நகரமான யந்தாய் புறநகரில் உள்ள ஹுஷன் தங்க சுரங்கத்திலேயே கடந்த ஜனவரி 10 ஆம் திகதி இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் சுமார் 22 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் ஒருவாரம் கழித்து அவர்களுள் 12 பேர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது.

அவர்களுள் ஒருவர் கோமாவில் இருந்த நிலையில் உயிரிழந்து விட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 350 மீற்றர் (1,148 அடி) நிலத்தடியில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள போதிலும், மீட்புப் பணியாளர்கள் இதுவரை சிறிய துளைகளைத் துளைக்க மட்டுமே முடிந்துள்ளது. எனினும் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கான உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வழகின்றது.

சுமார் 600 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர், சம்பவ இடத்தில் 25 ஆம்பியூலன்ஸ்கள் காத்திருக்கின்றன, அதே போல் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், அதிர்ச்சி நிபுணர்கள் மற்றும் உளவியலாளர்கள் ஆகியோரும் காத்திருப்பில் உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08