20 நாட்களான சிசுவின் ஜனஸா விவகாரம்: அடிப்படை உரிமை மீறல் மனு இன்று பரிசீலனைக்கு

Published By: Digital Desk 3

22 Jan, 2021 | 09:16 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொவிட் 19 தொற்றால் உயிரிழந்ததாக கூறப்பட்ட 20 நாட்களான சிசுவின் உடலை தகனம்  செய்தமை தொடர்பில், உயர் நீதிமன்றில்  தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (22.01.2021) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கொவிட் 19 தொற்றால் உயிரிழந்ததாக கூறப்பட்ட தமது 20 நாட்களான சிசுவின் உடலை தகனம் செய்த முறையில் சந்தேகம் இருப்பதாகவும் இதன் மூலம் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து குழந்தையின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி சிசுவின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு  தாக்கல் செய்திருந்தனர்.

கொழும்பு 15 ஐ சேர்ந்த முஹம்மட் மஹ்ரூப் மொஹம்மட் பாஹிம் மற்றும் பாத்திமா சப்னாஸ் ஆகியோர் தாக்கல் செய்த இந்த மனுவே இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளபடவுள்ளது. இம்மனுவில் மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா ஆஜராகவுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜயசூரிய, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ஆரம்ப நிலை சுகாதார சேவை தொற்றுநோய் மற்றும் கொவிட் ஒழிப்பு விவகாரம் தொடர்பிலான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ள, சுகாதார அமைச்சின் செயலர் சஞ்ஜீவ முனசிங்க, வைத்தியர் அமல் ஹர்ஸ டி சில்வா மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

திடீரென மரணித்த சிசுவின் உடலை தகனம் செய்வதற்கான எவ்வித தேவையும் இருக்கவில்லை எனவும் கொவிட் 19 காரணமாக உயிரிழந்த 19 பேரின் உடல்கள் அவ்வேளையிலும் பிரேத அறைகளில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53