வன்னி மாவட்ட வாக்காளர்களுக்கு காதர் மஸ்தான் விடுத்துள்ள கோரிக்கை

21 Jan, 2021 | 03:48 PM
image

வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில்  வசித்து வருகின்ற மக்கள் தமது வாக்காளர் விண்ணப்பப்படிவத்தை இம்மாதம் 29 திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க முடியும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புத்தளத்தில் வசித்து வரும் சுமார் 7000 இற்கும் மேற்பட்ட வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் தங்களது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக கடந்த 2020 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளில் வாக்களித்தனர்.

தற்போது இவர்களது பெயர்கள் சொந்த மாவட்ட வாக்காளர் பதிவேட்டில் இருந்து இவர்களது விருப்பதிற்கு மாறாக நீக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளரையும், ஆணையாளரையும் நேரில் சென்று சந்தித்து இரண்டு பக்கங்கள் கொண்ட கடிதங்களையும் கையளித்தேன்.  

உரிமைக் கோரிக்கை படிவம் விண்ணப்பிக்கும் திகதி முடிவடைந்துள்ள நிலையில் இந்த திகதியை மேலும் பத்து நாட்களுக்கு அதாவது இம்மாதம் 29 ஆம் திகதி வரை நீடித்து தருமாறு கேட்டிருந்தேன்.

அதற்கமைய தற்போது விண்ணப்ப திகதி எதிர்வரும் 29ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.  எனவே வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில்  வசித்து வருகின்ற மக்கள் தமது உரிமை கோரிக்கை படிவத்தை இம்மாதம் 29 திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:17:53
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54