பேலியகொட சி சிட்டி பல்பொருள் அங்காடி நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

Published By: J.G.Stephan

20 Jan, 2021 | 05:31 PM
image

பேலியகொட சி சிட்டி பல்பொருள் அங்காடியின் நிர்மாணப் பணிகள் மீண்டும் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த மற்றும் பிரதமர் அலுவலக தலைமை அலுவலகர் யோஷித்த ராஜபக்‌ஷ ஆகியோரின் தலைமையின் கீழ் இந்நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இது தொடர்பில் அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது :

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு ஏற்ப, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசனைக்கு இணங்க, பிரதமர் அலுவலக அதிகாரி யோஷித்த ராஜபக்‌ஷவின் மேற்பார்யின் கீழ் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த வேலைத் திட்டத்தின் ஆரம்ப விழா பல்பொருள் அங்காடியின் உத்தியோகபூர்வ வலையத்தளமும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பல கடைகளும் உத்தியோகபூர்வமாக கடை உரிமையாளர்களிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த வைபவத்தில் தேசிய இயந்திர நிலையத்தில் சேவையை நிறைவு செய்த 50 ஊழியர்களுக்கு 233 இலட்சமும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்