பிரியாவிடை உரையில் பைடனின் பெயரை குறிப்பிடாது வாழ்த்துக்களை தெரிவித்தார் ட்ரம்ப்

Published By: Vishnu

20 Jan, 2021 | 11:12 AM
image

பல தசாப்தங்களாக புதிய போர்களைத் தொடங்காத முதல் ஜனாதிபதியாக நான் திகழ்கிறேன் என்று தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப், நான்கு ஆண்டு காலம் தன்னுடன் இணைந்து பணியாற்றிய தனது நிர்வாக உறுப்பினர்களுக்கும் நன்றியினை கூறினார்.

வெளிச்செல்லும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டின் புதிய ஜனாதிபதி பதவியேற்புக்கு முன்னதாக செவ்வாயன்று வொஷிங்டனிலிருந்து காணொளி மூலமாக ஆற்றிய பிரியாவிடை உரையின்போதே இதனைக் குறிப்பிட்டார்.

அமெரிக்க நாடானது, ஒளி மிகுந்த, நம்பிக்கை வாய்ந்த மற்றும் அமைதியை விரும்பும் குடிமக்களை கொண்டது.  கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நம்முடைய நாட்டை மறுகட்டமைப்பு செய்யும் மிக பெரிய தேசிய முயற்சியை தொடங்கினோம்.

அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதி என்ற எனது பதவி காலம் நிறைவடைகிறது.  நாம் ஒன்றிணைந்து செய்த சாதனைக்காக உண்மையில் பெருமையுடன் நான் உங்கள் முன் நிற்கிறேன்.  கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் என்னை தேர்ந்தெடுத்ததற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றும் ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் இதன்போது தெரிவித்தார்.

நாம் சீனா மீது வரலாறு காணாத வரி விதிப்புகளை மேற்கொண்டோம்.  சீனாவுடன் பெரிய ஒப்பந்தம் செய்து கொண்டோம்.  ஆனால், அதற்கான ஈரம் காய்வதற்குள் முழு உலகமும் சீன வைரசால் பாதிக்கப்பட்டது.

தனது நிர்வாகம் அமெரிக்க கூட்டணிகளுக்கு புத்துயிர் அளித்ததுடன், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சீனாவுடன் நிற்க உலக நாடுகளை அணிதிரட்டியது.

அமெரிக்கா டேஷ் / ஐ.எஸ்.ஐ.எஸ் கலிபாவை தோற்கடித்து அதன் தலைவரைக் கொன்றதுடன், அடக்குமுறை ஈரானிய ஆட்சிக்கு எதிராக  நின்று உயர் மட்ட தளபதியான காசெம் சோலைமணி படுகொலை செய்யப்பட்டதையும் ட்ரம்ப் நினைவு கூர்ந்தார்.

தனது ஜனாதிபதி காலத்தில், வொஷிங்டன் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்ததாகவும், சர்வதேச அளவில் எதிர்ப்பு எழுந்த போதிலும், கோலன் ஹைட்ஸ் மீது இஸ்ரேலிய இறையாண்மையை அங்கீகரித்ததாகவும் அவர் கூறினார்.

இந்த வாரம், நாட்டில் புதிய நிர்வாகம் தொடங்க உள்ளது.  அமெரிக்காவை பாதுகாப்புடனும், வளமுடனும் வைத்திருப்பதில் அவர்கள் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக இறைவனை நாம் வேண்டுவோம்.  நமது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வோம். அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என வேண்டி கொள்கிறோம் என ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் ஜோ பைடனின் பெயரை உச்சரிக்காது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52