ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர கூடாது - ஆளும் தரப்பினர் சபையில் எடுத்துரைப்பு

Published By: Digital Desk 3

20 Jan, 2021 | 09:22 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைத்துவரக்கூடாது என ஆளும் கட்சி உறுப்பினர்கள் நேற்று சபையில் வலியுறுத்தினார்கள்.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளை தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர் சஜித் பிரேமதாச சட்டப் பிரச்சினை ஒன்றை முன்வைத்து, நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர ஏன் நடவடிக்கை எடுக்க முடியாமல்போனது என கேட்டபோது, அதுதொடர்பில் ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்பி கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா குறிப்பிடுகையில்,

சட்டத்தின் பிரகாரம் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பாராளுமன்றத்துக்கு வரமுடியாது. ஆனால் பொய் தர்க்கங்களை காெண்டுவந்து எதிர்க்கட்சி அவரை எப்படியாவது பாராளுமன்றத்துக்கு அழைத்துவர முடியற்சிக்கின்றார்கள்.

ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்ற வரப்பிரசாதங்களை பயன்படுத்திக்கொண்டு, நாட்டில் இருக்கும் அனைத்து வகையான நீதிமன்றங்களையும் அவமதித்து வந்தார். அதேபோன்று சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகளையும் விமர்சித்து வந்தார். இவ்வாறு பல சமூக விராேத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர முயற்சிக்கின்றனர்.இதற்கு இடமளிக்க கூடாது என்றார்.

அதனைத் தொடர்ந்து எழுந்த ராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவிக்கையில்,

ரஞ்சன் ராமநாயக்க இந்த சபையில் அனைத்து உறுப்பினர்களையும் விமர்சித்து வந்தார். நீதிபதிகளையும் மிகவும் மோசமான முறையில் விமர்சித்திருக்கின்றார். அவ்வாறு செயற்பட்ட ஒருவரையே எதிர்க்கட்சி பாாரளுமன்றத்துக்கு அழைத்துவர முயற்சிக்கின்றனர். 

அதனால் நீதிமன்றங்களையும் நீதிபதிகளையும் விமர்சித்த ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அளித்திருக்கும் தீர்ப்பை நகைப்புக்குட்படுத்தியா, அவரை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர எதிர்க்கட்சி முயற்சிக்கின்றது என கேட்கின்றேன் என்றார்.

அதனைத்தொடர்ந்து எழுந்த ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கையில்,

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த ஒரு கூற்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவர் கூறியதாவது, அரசியலமைப்பின் 89 ஆவது சரத்தின் பிரகாரம் மேல் நீதிமன்றத்தால் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினரின் ஆசனம் வெற்றிடமாகும். அதுதொடர்பில் தீர்மானம் எடுக்க சபாநாயகருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனக் கூயிருந்தார். அவ்வாறு கூறியவர் மூன்றுமாதங்களுக்கு பின்னர் மாறுபட்ட கருத்தை இன்று கூறுகிறார். ரஞ்சன் ராமநாயக்க நாட்டின் அரசியலமைப்புக்கும், நீதித்துறைக்கும் இழுக்கை ஏற்படுத்தியுள்ளார். சிறப்புரிமையை பயன்படுத்தி உயர்நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டாமென கோருகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59