விபத்து ஒன்றில் தொடர்புடைய இலங்கை பெண்ணொருவர் சைப்ரஸில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் 90 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் (39) வாகனத்தை பின்னால் செலுத்தும் போது குறித்த முதியவர் இருப்பதை அறியாமல் செலுத்தியுள்ள நிலையில், வாகனத்தின் பின்னால் இருந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்மாடி குடியிருப்பொன்றின் வாகனத்தரிப்பிடத்தில் வைத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.