கல்வி அமைச்சர் சுயதனிமைப்படுத்தலில் : சுகாதார அமைச்சில் 8 பேருக்கு கொரோனா : 77 பேர் தனிமைப்படுத்தலில்

Published By: Digital Desk 4

18 Jan, 2021 | 08:45 PM
image

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்ற அதே வேளை மரணங்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரிக்கிறது.

சுகாதார அமைச்சில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடர்புகளை பேணி 77 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று இரவு 8.30 மணி வரையான காலப்பகுதியில் 332 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை 53,409 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 45 820 பேர் குணமடைந்துள்ளதோடு 7324 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 717 பேர் தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கு கொரோனா தொற்று இன்று  உறுதிப்படுத்தப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுடன் நெருங்கி பழகியதை அடுத்து கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சுய தனிமையில் இருக்க தீர்மானித்துள்ளார்.

கல்வி அமைச்சர் தனது குடும்பத்தாருடன் சுய தனிமையில் உள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 8 மரணங்கள் பதிவாகின. அதற்கமைய நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 264 ஆக உயர்வடைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04