ஜோ பைடனின் மேஜர் என்ற நாய்க்கு வழங்கப்பட்ட கௌரவம்

Published By: Digital Desk 3

18 Jan, 2021 | 05:47 PM
image

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் முதன் முதலாக வசிக்கப் போகும் மீட்பு நாய் மேஜருக்கு அது வளர்ந்த இடமான டெலாவேர் ஹ்யூமன் அசோசியேஷன் 10,000 க்கும் மேற்பட்ட மக்களுடன் ஒரு மெய்நிகர் விருந்தை நடத்தியது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அந்நாட்டின் முதல் ஜனாதிபதி ஜோர்ஜ் வொஷிங்டன் உட்பட, 30 ஜனாதிபதிகளின் செல்ல நாய்கள் உள்ளிட்ட பிராணிகள் வலம் வந்துள்ளன.

ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும், வெள்ளை மாளிகையில் செல்லப் பிராணிகளுக்கு தடை விதித்தார்.

இந்நிலையில், ஜோ பைடன் சாம்ப் மற்றும் மேஜர் என்ற  இரு செல்ல நாய்களுடன், வெள்ளை மாளிகையில் 20 ஆம் திகதி குடியேற உள்ளார்.

அதில், மேஜர் என்ற நாய், மீட்பு பணிகளில் கைதேர்ந்தது. ஜனாதிபதி மாளிகையில், முதன் முதலாக வசிக்கப் போகும் மீட்பு நாய் என்ற  சிறப்பையும், இது பெற உள்ளது.

மேஜரை பைடன்  2018 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் தத்தெடுத்தார்.

சாம்ப் என்ற நாய் வொஷிங்டனுக்கு புதியதல்ல. பைடன் குடும்பம் 2008 ஆம் ஆண்டில் நாயை வெள்ளை மாளிகைக்கு அழைத்து வந்தது, அவர் துணை ஜனாதிபதியாக இருந்த இரண்டு காலப்பகுதிகளிலும் அவர்களுடன் தங்கியிருந்தது.

டெலாவேர் ஹ்யூமன் அசோசியேஷனின் நிர்வாக பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்,

"இது எங்களுக்கு எல்லாவற்றையும் குறிக்கிறது, ஏனெனில் இது நாங்கள் செய்யும் வேலையில் ஒரு  பிரகாசத்தை தந்நதுள்ளது" என தெரிவித்துள்ளார்.

குறித்த மெய்நிகர் விருந்து நிகழ்ச்சியில் டெலாவேர் ஹ்யுமேன் அசோசியேஷன் 100,000 டொலருக்கும் அதிகமான நிதியை திரட்டியள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right