வவுனியா நகரின் பல பகுதிகள் இன்று விடுவிப்பு

Published By: J.G.Stephan

18 Jan, 2021 | 12:19 PM
image

வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தனிமைப்படுத்தப்படுத்தல் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்ட பல பகுதிகள் இன்று(18.01.2021) திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிசூரை சேர்ந்த கர்பிணிபெண் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த கிராமம் கடந்த நான்காம் திகதி முடக்கப்பட்டிருந்தது. அதேபோல வவுனியா நகரப்பகுயில் தொற்றாளர்கள் அதிகரித்துவந்த நிலையில் பிரதான நகரம் உட்பட்ட 19 கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் கடந்த ஒருவாரமாக அமுல்படுத்தப்பட்டிருந்தது. 

அவற்றில் பசார்வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தைவீதி, கந்தசாமிகோவில் வீதி, மில் வீதி, சூசைப்பிள்ளையார்குளம் வீதிகள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பகுதிகள் இன்றுகாலை விடுவிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் மற்றும் தினச்சந்தை ஆகியன திறக்கப்படாத நிலையில் குறித்த வீதியால் பொதுமக்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் நகரின் பல பகுதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் காலையிலேயே அதிகமான பொதுமக்கள் பல்வேறு தேவைகள் நிமித்தம் நகரிற்குள் வருகை தந்துள்ளமையை அவதானிக்க முடிவதுடன் அனேகமான பாடசாலைகளில் மாணவர் வரவு மிகவும் குறைவாக காணப்பட்டதாகவும் தெரியவருகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08