சிலாபம் குருசபாடுவ கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் மீனவர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்று (05) இரவு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டுள்ள சடலம் சிலாபம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.