அமுலுக்கு வரவுள்ள சீனாவின் உயிரியல் பாதுகாப்புச் சட்டம்

Published By: J.G.Stephan

17 Jan, 2021 | 05:51 PM
image

சீனா தனது தேசிய பாதுகாப்புக் கல்வித் தினத்தினை அனுஷ்டிக்கும் ஏப்ரல் 15ஆம் திகதி உயிரியல் பாதுகாப்புச் சட்டத்தினையும் அமுலாக்கவுள்ளது.

சீனாவில் உள்ள உயிரியல் தொழில்நுட்ப மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்த விதிமுறைகளை வலுப்படுத்துவற்காகவே இந்த சட்டத்தினை அமுலாக்குவதன் நோக்கமாகும்.

சீனாவானது, கொரோனா வைரஸ் தோற்றம் பெற்றமை தொடர்பிலான விமர்சனங்களுக்கு முகங்கொடுத்துள்ள நிலையிலும், உலக அளவில் கொரோனா தாக்கம் ஏற்பட்டிருக்கும் நிலையிலேயே இந்த சட்டத்தினை அமுலாக்குவதற்கு சீனா முயற்சித்துவருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த சட்டமானது, கடந்த ஆண்டு ஒக்டோபரில் தேசிய காங்கிரஸின் நிலைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் டிசம்பர் 26ஆம் திகதி இதற்கு உத்தியோக பூர்வமான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இவ்வறு அனுமதி கிடைத்து ஒரு வாரங்களுக்குள் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக தாமதங்கள் நிலவிக்கொண்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக உள்ளது.

இவ்வாறு உயிரியல் பாதுகாப்புச் சட்டம் அமுலாக்குவதற்கு காலதாமதங்கள் காணப்படுவதற்கு வேறு விடயங்கள் காரணமாக இருக்கின்றனவா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது. 

இந்த உயிரியல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விலங்குச் சந்தைகளுக்குள் பிரவேசிப்பது தடுக்கப்படுகின்றது. இவ்வாறு தடுக்கப்படுகின்றமையானது, வுஹான் போன்ற சந்தைகளில் காணப்படும் சீரற்ற நிலைமைகளை மூடி மறைக்கப்பட வேண்டியதற்காகவா இல்லை விலங்குகள் மூலம் மீண்டும் வைரஸ் பரவல் இடம்பெறாமை தடுக்கப்பட வேண்டியதற்காகவா என்பது கேள்வியாகின்றது. 

இந்த சந்தேகங்களுக்கு இடையில், இந்த சட்டமானது சீன கம்னியூஸ் கட்சியையும் அதன் பொதுச்செயலாளரும், ஜனாதிபதியுமான ஷி ஜின் பிங்கை மட்டும் மேலும் பலப்படுத்துவதாக உள்ளது.

இந்த சட்டமானது உயிரியல் பாதுகாப்பு என்ற வகையறைக்குள் வருவதால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் உயிரியல் பாதுகாப்பு முகாமை அமைப்புக்களை நிறுவுவதற்கான பொறுப்பினை தேசிய பாதுகாப்பு ஆணையகமே கொண்டிருக்கின்றது. 

தேசிய பாதுகாப்பு ஆணையகமானது ஷி ஜின் பிங்கின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால் உயிரியல் பாதுகாப்பு கட்டமைப்புக்களும் அவருடைய நேரடியான கட்டுப்பாட்டிற்குள்ளேயே செல்லவுள்ளது.

இணையாண்மையைக் கொண்டுள்ள சீனா தனது நாட்டில் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறைகளுக்கு மனித மரபணு குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அறிவுறுத்துகின்றது. 

எனினும், மரபணு சேகரிப்பதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் குற்றங்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றிய விசாரணை  இந்த சட்டத்தினால் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் சீன கம்னியூஸ்ட் கட்சியின் சித்தாந்தத்திற்கு முரணான எதனையும் குற்றமாக அல்லது சட்டவிரோதமாக பொதுப்படையில் கருதப்படுவதால் இந்தச் சட்டங்கள் ஷி ஜின் பிங்கின் எதிர்ப்பாளர்களுக்கு எதிராகப்பயன்படுத்த முடியும்  என்ற பார்வையும் உள்ளது. அதேநேரம், சீனாவின் உயிரியல் தொழில்நுட்பத்திற்கும் அச்சுறுத்தலான வாயில்களும் திறந்திருக்கின்றன. 

மேலும் சீனாவில் உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் அதிக ஆபத்து, நடுத்தர ஆபத்து மற்றும் குறைந்த ஆபத்து வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கட்டுப்படுத்தப்பட்ட அத்தியாவசிய உபகரணங்கள் மற்றும் சிறப்பு உயிரியல் முகவர்கள் எந்தவொரு கொள்முதல் அல்லது இறக்குமதியையும் சம்பந்தப்பட்ட அதிகாரத்துடன் பதிவு செய்ய வேண்டும் என்பதையும் இந்தச் சட்டம் குறிப்பிட்டுக் கூறுகின்றது. 

அதேநேரம் இந்த சட்டம் மீறப்படுமாயின் 41-10 மில்லியன் யுவான் அபராதமாக விதிப்பதில் இருந்து 10 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை வரையில் வழங்க முடியும். அதேநேரம், உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபடுவதிலிருந்து முழுமையாக விலக்களிக்கவும் முடியும். 

இதனால் ஷி ஜின் பிங்கிற்கு விசுவாசமாக இருப்பவர்கள் மட்டுமே உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பதையும், பிற்காலத்தில் ஷியை  மீறுபவர்கள் அல்லது அவர எதிர்ப்பவர்கள் எதிர்ப்பின் அளவிற்கு ஏற்ப தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதும் வெளிப்படுத்தப்படுகின்றது. 

அதேநேரம் சீன கம்னியூஸ்ட் கட்சியின் உளவு வழிமுறைகளை பல்வகைப்படுத்துவதே உயிர் பாதுகாப்புச் சட்டத்தின் மற்றொரு வெளிப்படையான குறிக்கோளாகும்.

சீனாவின் பிரதான நிலப்பகுதிக்குள் நுழையும் நபர்களின் உயிரியல் அடையாளங்காட்டிகளை சீன அரசாங்கம் விசாரணை என்ற பெயரில் சேகரிக்கும். இதன் மூலம், சிவில் மற்றும் இராணுவ பயன்பாடுகளுக்கான பிற நாடுகளின் மரபனு வரிசைமுறைகளைப் சேகரிப்பதையே  சீனா நோக்கமாகக் கொண்டுள்ளது.

அனைத்து உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் நேரடியாக ஷி ஜன் பிங்கின் கீழ் இருப்பதால், சீனாவின் உயிரி தொழில்நுட்ப ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைச் சுற்றி தெளிவற்ற தன்மை அதிகரிக்கும். 

இது சீனாவின் உயிரியல் தொழில்நுட்ப ஆய்வகங்கள், மரபணு ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றங்கள் என்ற பெயரில் உயிரியல் ஆயுதங்களை மறைமுகமாக உருவாக்க உதவும். 

உயிரியல் பாதுகாப்பு விதிமுறைகளின் போதிய வெளிப்படைத்தன்மை, தேசிய பாதுகாப்பு அமைப்பில் உயிர் பாதுகாப்பு சேர்க்கப்படுவது மற்றும் மனித மரபணு வளங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கான வழிமுறைகள் சீனா உயிரியல் போருக்கு தயாராகி வருகிறது என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.

இந்த சட்டம் இயற்றப்பட்டமை சீனாவின் உயிரியல் பாதுகாப்பு நிர்வாகத்தில் ஒரு புதிய மைல்கல்லாகும். அதேபோன்று ஷி ஜின்பிங்கின் அந்தஸ்தத்தும் அதிகரிக்கப்பட்டது. மேலும் சர்வதேச உயிரியல் பாதுகாப்பு பிரச்சினைகளில் சீனாவின் முக்கிய பங்கை சித்தரிக்கவும் பயன்படுவதாக உள்ளது.

ஏற்கனவே தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட உலகில் சீனாவின் உயிரியல் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கும்போது கண்ணுக்குத் தெரியாத உயிரியல் போரை ஆரம்பிப்பதற்கு சீனா தயாராகி கொண்டிருந்தால் அது யாருக்கும் ஆச்சரியமாக இருக்காது. ஏனெனில் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் அதன் உலகளாவிய செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக, முயலும் ஷி ஜின்பிங்கின் சுய-மைய மனோபாவம் அறியப்பட்டதொன்று தான்.


ஷி நியுஸ் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54