2 இலட்சம் தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து கிடைக்கும் - சுகாதார அமைச்சு

Published By: Digital Desk 4

17 Jan, 2021 | 07:13 PM
image

(ஆர்.யசி)

அடுத்த இரண்டு வாரங்களில் இந்தியாவில் இருந்து இரண்டு இலட்சம் ஒக்ஸ்போர்ட் -ஆஸ்டாசனிக் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவரவுள்ளதுடன்,  உலக சுகாதார ஸ்தாபனமும் ஒரு இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதாக அரசாங்கத்திடம் அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். 

Articles Tagged Under: Ministry of Health | Virakesari.lk

எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் சுற்றுலா பயணிகளுக்காக நாடு திறக்கப்படவுள்ள நிலையில் நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை எனவும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவரும் செயற்பாடுகள் மற்றும், சுற்றுலாத்துறைக்கான மீண்டும் நாடு திறக்கப்படுகின்றமை குறித்து சுகாதார அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பில் வினவிய போதே அவர் இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

உலக சுகாதார ஸ்தாபனத்துடன் நாம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கும் வேலைத்திட்டத்தில் உலக சுகாதார ஸ்தாபனம்  பூரண இணக்கத்தை ஏற்கனவே தெரிவித்திருந்தனர். 

அதற்கமைய உலக நாடுகளுக்கு வழங்கப்படவுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் இலங்கைக்கும் முதற் கட்டமாக ஒரு இலட்சம் தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. 

அதற்கமைய பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் எமக்கு உலக சுகாதார ஸ்தாபனதத்தின் மூலம் வழங்கும் ஒரு இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கும்.

அதேபோல் இந்தியா தற்போது 20 மில்லியன் ஒக்ஸ்போர்ட் -ஆஸ்டாசனிக் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தமது நேச நாடுகளுக்கு வழங்க தீர்மானித்துள்ள நிலையில் இலங்கைக்கும் இந்த தடுப்பூசிகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர். 

அதற்கமைய இரண்டு இலட்சம் தடுப்பூசிகள் அடுத்த இரண்டு வாரங்களில் இலங்கைக்கு கிடைக்கும். அதன் பின்னர் மேலதிகமாக எம்மால் கொள்வனவு செய்துகொள்ளவும் முடியும். இலவசமாக இவை கிடைக்கவில்லை, அதற்கான நிதியை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டியுள்ளது. 

அவசியத்தை பொறுத்தே அடுத்த கட்டத்தில் எவ்வளவு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது என்பது தீர்மானிக்கப்படும்.

அதேபோல் விமான நிலையம் திறக்கப்படுவதனால் நாட்டுக்குள் எந்த பாதிப்பும் வரப்போவதில்லை, இப்போது எவ்வாறு சுகாதார வழிமுறைகளுடன் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனரோ அதேபோல் எதிர்காலத்திலும் சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். 

குறிப்பாக ஒரு நாளைக்கு மூவாயிரம் சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்குள் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனினும் பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் தவிர்ந்து ஏனைய நாட்டவர்கள் வர முடியும் எனவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33