வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் நாளை முதல் வழமைக்கு

Published By: Vishnu

17 Jan, 2021 | 10:20 AM
image

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் நாளை முதல் வழமை நிலைக்கு திரும்புவதுடன் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

வவுனியாவின் முடக்க நிலமை தொடர்பில் அவரிடம் ஊடகவியலாளர்கள் வினாவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

வவுனியா மாவட்டத்தில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையினையடுத்து கடந்த 12.01.2021 அன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கொவிட்19 அவசர கால நிலமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்று மாவட்டத்தின் சில பகுதிகளை 24 ஆம் திகதி வரை தனிமைப்படுத்துவதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி வவுனியா நகருக்குள் பிரவேசிக்கும் பிரவேசிக்கும் பகுதிகளான நெளுக்குளம் சந்தி , தாண்டிக்குளம் சந்தி ,மாமடுவ சந்தி ,பூந்தோட்டம் சந்தி , கண்டி வீதி இரானுவ முகாம் சந்தி ஆகிய இடங்களில் உள்ளடக்கிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.

இந் நிலையில் வவுனியா பஜார் வீதி , தர்மலிங்கம் வீதி , சந்தை சுற்றுவட்ட வீதி போன்றவற்றினை தவிர்ந்த ஏனைய தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் நாளை திங்கட்கிழமை வழமைக்கு திரும்புவதுடன் வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதுது.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி நடந்து கொள்ளுமாறும் அவர் வலியுறுத்திக் கேட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22