கொரோனாவால் மட்டக்களப்பில் ஒருவர் உயிரிழப்பு:  குறித்தப் பகுதி முடக்கம்..!

Published By: J.G.Stephan

16 Jan, 2021 | 03:02 PM
image

மட்டக்களப்பு நகர் மாநகரசபை பொதுச் சந்தைக்கு அருகிலுள்ள பகுதியில் மாரடைப்பால் இறந்த 79 வயதுடைய முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று என இன்று சனிக்கிழமை (16) கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, அந்த பகுதி முடக்கப்பட்டு வீதிகள் யாவும் மூடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். 

குறித்த நபர் சுகயீனம் காரணமாக வீட்டிலேயே நேற்று வெள்ளிக்கிழமை இரவு மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்தவர் மீது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, குறித்த நபரின் சடலத்தினை அங்கிருந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவதற்கான நடவடிக்கையினை பொது சுகாதார ஊழியர்கள் மேற்கொண்டுவருவதுடன், அந்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலத்தை பார்க்க சென்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01