பாராளுமன்ற அதிகாரிகள் ஐவருக்கு கொரோனா தொற்று

Published By: Digital Desk 4

15 Jan, 2021 | 09:12 PM
image

(ஆர்.யசி)

பாராளுமன்ற கொரோனா பரவலை அடுத்து கடந்த வியாழக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள், பணியாளர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினற்கள் 15 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் பாராளுமன்ற அதிகாரிகளில் ஐவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இன்றும் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள் சிலர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டிருந்தனர்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் 31 பேரும், பணியாளர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் பாராளுமன்றத்தில் சகலரும் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும் என சபாநாயகர் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கமைய கடந்த வியாழக்கிழமை  பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில்,  15 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட்கள் 463 பேர் நேற்றைய தினம் பரிசோதனைகளில் பங்குபற்றியிருந்தனர். 

இவர்களில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற பணியாளர்களுடன் பாராளுமன்ற பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 448 பேர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டிருந்த நிலையில் இவர்களில் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரையில் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற பணியாளர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டிருந்தனர். இன்றைய தினம் 16 பாராளுமன்ற உருபினர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55