சொகுசு பஸ்ஸில் 18 கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கடத்தியவர் கைது

Published By: Digital Desk 4

16 Jan, 2021 | 07:30 AM
image

(செ.தேன்மொழி)

கொஸ்கொட பகுதியில் சொகுசு பஸ்ஸில் 18 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளை கடத்திய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,

கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கொஸ்கொட பகுதியில் சொகுசு பஸ் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டது.  அந்த பஸ்ஸிலிருந்து 18 கிலோ கிராம் தொகை ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.  இதன்போது பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதுடைய சாரதி பல்வேறு பகுதிகளுக்கு இவ்வாறு போதைப் பொருட்களை கடத்திச் சென்றுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. தென்மாகாணத்தில் ஒரு பிரதேசத்திற்கு இந்த போதைப் பொருள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்தியாவில் உயிரிழந்தாக கூறப்படும் 'அங்கொட லொக்கா' என்ற பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரின் சகாவான 'லெட்டி' என்ற போதைப் பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமான போதைப் பொருளே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேக நபரை 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்துவர் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41