பிக் பேஷ் கிரிக்கெட் : பிரிஸ்பேன் ஹூட் அணி அதிரடி வெற்றி

15 Jan, 2021 | 02:35 PM
image

பிக் பேஷ் இருதுக்கு-20 தொடரின் 39 ஆவது லீக் போட்டியில், பிரிஸ்பேன் ஹூட் அணி 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.


அவுஸ்திரேலியாவின் கன்பெரா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், பிரிஸ்பேன்ஹூட் அணியும் மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணியும் மோதின.



இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பிரிஸ்பேன் ஹூட் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.



இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.



இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வெப்ஸ்டர் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களையும் மெக்கூர்க் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



பிரிஸ்பேன் ஹூட் அணியின் பந்துவீச்சில், ஸ்டெக்கீ 2 விக்கெட்டுகளையும் பார்ட்லெட், வில்டர்முத், குஹ்மேன் மற்றும் மோர்னி மோர்கல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.



இதனைத்தொடர்ந்து 150 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பிரிஸ்பேன் ஹூட் அணி, 18.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் பிரிஸ்பேன் ஹூட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.



இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிறிஸ் லின் 50 ஓட்டங்களையும் ஜோ பர்ன்ஸ் ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணியின் பந்துவீச்சில், பீட்டர் ஹட்சோக்லோ 2 விக்கெட்டுகளையும் இமாட் வசிம், கேன் ரிச்சட்சன் மற்றும் ஜெக் பிரிஸ்ட்விட்ஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.



இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 14 பந்துகளில் 1 சிக்ஸர் 4 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பிரிஸ்பேன் ஹூட் அணியின் ஜோ பர்ன்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35