உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை மார்ச்சில்

Published By: Vishnu

15 Jan, 2021 | 02:05 PM
image

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டோர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையானது எதிர்வரும் மார்ச் 08,09 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் 2019 உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களை  தடுக்க முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமைகள் மீறப்பாட்டுள்ளதாக கூறியே 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தககுதலில் தனது இரு பிள்ளைகளை இழந்த தந்தையான நந்தன சிறிமான்ன,  சுற்றுலா துறை வர்த்தகர் ஜனக விதானகே, இரு கத்தோலிக்க மதகுருமார்,  ஷெங்ரில்லா ஹோட்டலில் குண்டுத் தாக்குதலில் சிக்கிய சட்டத்தரணி  மோதித்த ஏக்கநாயக்க உள்ளிட்ட 12 பேர் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதில் பொறுப்புக் கூறத்தக்க தரப்பினராக செயலர் ஹேமசிறி, பூஜித் ஜயசுந்தர மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59