இலங்கைக்கு எதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சதீவில் போராட்டத்திற்கு முஸ்தீபு

Published By: Digital Desk 3

15 Jan, 2021 | 11:16 AM
image

(ஆர்.யசி)

இந்திய தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை  இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் மீறுவதை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள்  இம்மாதம் 23 ஆம் திகதி தமது மீன்பிடி விசைப்படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி கச்சத்தீவு நோக்கி சென்று போராட்டம் நடத்தவுள்ளதாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 26 இந்திய இராமேஸ்வரம் மீனவர்களை நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ள நிலையில் இந்திய  மீனவர்களின்  நான்கு விசைப்படகுகளையும் அரசுடமை செய்வதாக  ஊற்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அடுத்தே ராமேஸ்வரம் மீனவர்கள்  இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.  

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட பல இலட்ச ரூபா பெறுமதியான இந்திய மீனவர்களின் விசைப்படகுகளை  உடனடியாக விடுதலை செய்யக்கோரியும்,  1976 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமை உண்டு என்பதை வலியுறுத்தியும் அதையும் மீறி அப்பகுதிகளில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதை கண்டித்தும் பாரம்பாரிய இடத்தில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும்  உரிமையை மீட்டுத்தர வலியுறுத்தியும் எதிர்வரும்  23 ஆம் திகதி,  ராமேஸ்வரத்தில் உள்ள விசைப்படகுகள் அனைத்திலும் கருப்புக் கொடிகளை கட்டி கச்சத்தீவு நோக்கி பயணித்து போராட்டம் நடத்தவுள்ளதாக நேற்றைய தினம் மீனவர்கள் சங்கத்தினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய முட்டை இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை

2024-03-30 11:25:33
news-image

காதில் ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெற்றவர்...

2024-03-30 11:16:51
news-image

2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வாழ்க்கைச்...

2024-03-30 11:06:31
news-image

ரணிலுக்கு ஆதரவளிக்க கருணா தீர்மானம்

2024-03-30 11:19:08
news-image

கரையோர மார்க்கத்தில் பல ரயில் சேவைகள்...

2024-03-30 10:39:27
news-image

முல்லைத்தீவு முள்ளியவளையில் வீட்டு காணிக்குள் பைப்லைன்...

2024-03-30 10:05:05
news-image

அம்பலாங்கொடையில் இரு இளைஞர்கள் சுட்டுக் கொலை...

2024-03-30 09:57:58
news-image

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை : சந்தேகநபர்களின்...

2024-03-30 09:55:12
news-image

மயிலிட்டி துறைமுக பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்...

2024-03-30 09:24:58
news-image

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உடன்...

2024-03-30 08:54:00
news-image

இலங்கை குறித்த 'மிகக் கடுமையான' பயண...

2024-03-29 22:08:36
news-image

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் ...

2024-03-30 06:20:06