உள்ளூர் திரைப்படத்துறையை ஊக்குவிக்க வரி நிவாரணம்

Published By: Vishnu

15 Jan, 2021 | 09:53 AM
image

உள்ளூர் திரைப்படத்துறையை ஊக்குவிக்கும் வகையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் வழங்கப்பட்டு பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தினால் இரத்து செய்யப்பட்ட வரி நிவாரணத்தை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்கு தற்சமயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோரினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திரைத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் கடந்த 8 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ, உள்ளூர் திரைப்பட கலைஞர்களின் கூட்டணியின் தலைவர், பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

அதற்கமைய திரைப்பட தயாரிப்பு மற்றும் திரைப்பட காட்சிப்படுத்தலுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை இறக்குமதி செய்யும் போது இறை வரி சலுகை வழங்கப்படும்.

அத்துடன் ஒரு திரைப்படத்தின் தயாரிப்புக்காக செலவிடப்பட்ட பணத்திற்காக வரி விலக்கு மற்றும் திரைப்படத்தை திரையிடப்படுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி நிவாரணம் குறித்தும் இந்த விவாதத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த வரி நிவாரணம் திரைப்பட கூட்டுத்தாபனத்தின் ஒப்புதலுக்கமைய செயற்படுத்தப்படும். அதற்கேற்ப உள்ளூர் திரைப்பட துறையினர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட துறையுடன் தொடர்புடைய அனைத்து வல்லுனர்களுக்கும் திரைப்பட கூட்டுத்தாபனத்தின் ஊடாக கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் இந்த வரி சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு கிட்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55