கொவிட்-19 கட்டுப்பாட்டுக்குள் வந்த பின் மாகாண சபை தேர்தல் - செஹான் சேமசிங்க

Published By: Digital Desk 3

15 Jan, 2021 | 09:09 AM
image

(இராஜதுரை ஹஷான்)

மாகாணசபை தேர்தல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு அத்தியாவசிய தேர்தலாக காணப்படுகிறது. மக்களின் அடிப்படை உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்கும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் மாகாண சபை தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என சமுர்த்தி, நுண்கடன் மற்றும் அரச தொழில் வழங்கல் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாண சபை முறைமையை அரசாங்கம் இரத்து செய்ய முயற்சிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு தவறானதாகும். மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு கூட்டமைப்பினர் பொறுப்பு கூற வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்திலும் கூட்டமைப்பினர் பங்காளிகளாக செயற்பட்டுள்ளார்கள்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. மாகாண சபைமுறைமையை முழுமையாக செயற்படுத்த முடியாது. மாகாண சபை முறைமையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில விடயங்கள் நாட்டின் அரச கட்டமைப்புக்கு பொருத்தமற்றதாக உள்ளது. முரண்பாடற்ற வகையிலான விடயங்கள் மாத்திரம் மாகாண சபை முறைமையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்படுத்தினார்.

மாகாணசபை தேர்தலை நடத்தினால் அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தோல்வியடையும் என்பதை நன்று அறிந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டது. ஏனைய மாகாணங்களை காட்டிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு மாகாணசபை முறைமை அத்தியாவசியமானதொன்றாக காணப்பட்டது.தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தார்கள்.

நாம் வழங்கிய தேர்தல் உரிமையினை நல்லாட்சி அரசாங்கம் பாதுகாக்கவில்லை. உள்ளுராட்சிமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியின் அச்சத்தினால் மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரதான எதிர்க்கட்சியாக இருந்துக் கொண்டு ஆதரவு வழங்கினார்கள். நல்லாட்சி அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் கூட்டமைப்பினர் துணை நின்றார்கள்.

மாகாணசபை முறைமையை அரசாங்கம் நீக்க முயற்சிப்பதாக கூட்டமைப்பினர் தற்போது குற்றஞ்சாட்டுவது தவறாகும்.

மக்களின் ஜனநாயாக உரிமைஇகளுக்கு புறும்பாக அரசாங்கம்  செயற்படாது  கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் மத்தியில்  மாகாண சபை தேர்தலை நடத்துவது சவால்மிக்கது அத்துடன் கொவிட் தாக்கதினால் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார மேம்படுத்துவதும் சவால்மிக்கது. ஆகவே, இச்சவால்களை மகாணசபை தேர்தலை நடத்துவதில் தேர்தல் முறைமை கொவிட்-19 தாக்கம் ஆகிய  இரு பிரதான விடயங்கள் குறித்து தற்போது ஆராயப்படுகிறது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தி மகாண சபை தேர்தலை நடத்த  எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58