வயல் வெளி ஊடாக வீடு நோக்கி வந்து கொண்டிருந்த 16 வயது நிரம்பிய மாணவனொருவன் மின்னல் தாக்குதலினால் மரணமான சம்பவமொன்று மொனராகலைப்பகுதியின் உலனுகே என்ற இடத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

மின்னல் தாக்குதலுக்கு இழக்கான மாணவனை சியாம்பலான்டுவை அரசினர் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதிலும் அம்மாணவனை பரிசோதித்த வைத்தியர்கள் மாணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சியாம்பலாண்டுவைப் பொலிஸார் மேற்படி சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.