பஸ் நடத்துனர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

Published By: Digital Desk 4

14 Jan, 2021 | 09:18 PM
image

(செ.தேன்மொழி)

வெலிகம பகுதியில் மாத்தறை பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் நடத்துனர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பகுதியில் நேற்று பிற்பகல் 3.50 மணியளவில் , மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்றின் நடத்துனரை,  பிரிதொரு பஸ் நடத்துனர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். 

சம்பவத்தின் போது  பஸ்ஸின் மிதி பலகையில் பயணித்துள்ள பஸ் நடத்துனர் காயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஹக்மன பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பஸ் நடத்துனர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் , இவருக்கு சொந்தமான பஸ்ஸிலே அவர் நடத்துனராக செயற்பட்டு வந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

அம்பலன்கொட பஸ் தரிப்பிடத்தில் வைத்து கடந்த 7 ஆம் திகதி  உயிரிழந்த பஸ் நடத்துனருக்கும் , பிரிதொரு பஸ் நடத்துனருக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமையின் காரணமாகவே , இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ள வெலிகம பொலிஸார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22