இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா மீட்பு

Published By: Digital Desk 4

13 Jan, 2021 | 09:20 PM
image

சமீப காலமாக இந்தியாவின் தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, கடல் பல்லி, கஞ்சா, சமையல் மஞ்சள்  உள்ளிட்ட பொருட்கள் அதிகமாக கடத்தப்பட்டு வருகிறது.

இதனை தடுக்க இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்  தனுஸ்கோடி கடற்கரை வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக கஞ்சா கடத்த இருப்பதாக மண்டபம் கடலோர காவல் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தனுஸ்கோடி அருகே உள்ள மூன்றாம் தீடையில்  கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் 2 மூட்டைகளில் சுமார் 150 கிலோ கஞ்சா கடற்கரை ஓரத்தில் கரை ஒதுங்கி இருந்து. இதனை கண்ட இந்திய கடலோர காவல் படையினர் கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இந்த கடத்தல் சம்பவத்தின் போது இலங்கையை சேர்ந்த நபர்கள் யாரும் தனுஸ்கோடி பகுயில் மறைந்துள்ளார்களா? அல்லது தமிழகத்ததைச் சேர்ந்த கடத்தல் காரர்கள் கடலோர காவல் படை வீரர்களை கண்டதும் தீவுகளில் மறைந்து கொண்டார்களா? என்பது குறித்து கரை ஓரங்களிலும் தீவு பகுதிகளிலும்  கடற்படை மற்றும்  மெரைன் பொலிஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து மீட்கப்பட்ட கஞ்சா மூடைகளை மண்டபத்தில் உள்ள கடற்படை முகாமிற்கு எடுத்து சென்றனர்.

மேலும் ராமேஸ்வரம் உளவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்தது தனுஸ்கோடி பகுதியில் 2 மூடைகளில் சுமார் 60 கிலோ கஞ்சாவை மீட்டு செய்து தனுஸ்கோடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மீட்கப்பட்ட கஞ்சா ராமேஸ்வரம் சுங்க துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பறிமுதல் செய்யப்பட்ட 210 கிலோ மொத்த கஞ்சாவின்  இலங்கை மதிப்பு சுமார் 31 இலட்சம் ரூபாய் இருக்கும் என கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா குறித்து உளவுத்துறை அதிகாரிகள் ராமேஸ்வரம் அடுத்த தனுஸ்கோடி, அரிச்சல்முனை, மூன்றாம் சத்திரம், வேதாளை, தோப்புக்காடு கிராமங்களில் உள்ள மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40