மேல்மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கு மீண்டும் அன்டிஜன் பரிசோதனை

Published By: Digital Desk 3

13 Jan, 2021 | 05:07 PM
image

(செ.தேன்மொழி)

மேல்மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கு மீண்டும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும்  கூறியதாவது ,

மேல்மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய மேல்மாகாணத்திலிருந்து வெளி பிரதேசங்களுக்கு செல்வதற்காக பயன்படுத்தப்படும் 11 பகுதிகளிலும் இவ்வாறு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.  

இந்நிலையில் , நாளை இடம்பெறவுள்ள தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேல்மாகாணத்திலிருந்து பலரும் வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புள்ளது.

அதனால் , இவ்வாறு வெளி பிரதேசங்களுக்கு செல்லும் நபர்கள் ஊடாக ஏனைய பகுதிகளில் கொவிட்-19 வைரஸ் பரவலடைந்து புதிய கொத்தணிகள் உருவாகுவதற்கு வாய்ப்புள்ளது. என்பதன்காரணமாகவே அதனை தடுக்கும் வகையில் இவ்வாறு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

இதன்போது மேல்மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைவரையும் இந்த அன்டிஜன் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55