சிரியாவின் ஆயுதக் கிடங்கு, இராணுவ நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்

Published By: Vishnu

13 Jan, 2021 | 01:34 PM
image

கிழக்கு சிரியாவின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் இராணுவ நிலைகள் மீதான இஸ்ரேலிய வான் தாக்குதல்களின் விளைவாக குறைந்தது ஐந்து வீரர்களும் 11 நட்பு போராளிகளும் உயிரிழந்துள்ளதாக சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வகம் இன்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய விமானப்படை சிரியாவின் கிழக்கு நகரமான டெய்ர் அஸ் சோர் முதல் சிரிய-ஈராக் எல்லையில் உள்ள அல் புகாமால் பாலைவனம் வரை பல இடங்களில் 18 க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியது.

இந்த தாக்குதல்களில் ஈரானிய புரட்சிகர காவலர்கள், லெபனான் ஹெஸ்பொல்லா மற்றும் ஈரானிய சார்பு ஆப்கானிய போராளிகள் அடங்கிய பேட்மியோன் பிரிவுக்கு சொந்தமான ஐந்து சிரிய வீரர்கள் மற்றும் 11 நட்பு போராளிகள் கொல்லப்பட்டனர் என்று ஆய்வகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் அவர்களின் நாடுகள் மற்றும் ஒரு உறுதியான முடிவு உடனடியாக அறியப்படவில்லை. சிரிய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 1:10 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரானிய சார்பு போராளிகளுக்கு சொந்தமான பல கிடங்குகள் மற்றும் தளங்கள் இப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிரிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் இது ஒரு வாரத்திற்குள் சிரியாவில் இஸ்ரேல் மேற்கொண்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

கடந்த 7 ஆம் திகதி இறுதியாக இஸ்ரேல், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் தெற்கில் உள்ள நிலைகளை இலக்காகக் கொண்டு தாக்குதலை முன்னெடுத்தது. இதில் ஈரான் சார்பு மூன்று போராளிகள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17