கிழக்கு முனையத்தை விற்க மாட்டோமென ஜனாதிபதி உறுதியளிக்க வேண்டும்: அநுரகுமார

Published By: J.G.Stephan

13 Jan, 2021 | 11:45 AM
image

(செ.தேன்மொழி)
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனை செய்யப் போவதில்லை என்று ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தொழிற்சங்கங்கள் முன்னிலையில் உறுதியளிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

நாட்டில் கொவிட் -19 வைரஸ் பரவலடைந்து வந்தாலும், நாட்டின் வளங்களை விற்பனை செய்வதையும், கொள்ளையிடுவதையும் ஆளும் தரப்பினர் நிறுத்தப் போவதில்லை. அதனால், நாட்டின் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் அனைவரையும் முன்வருமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

காலி முகத்திடலில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்குமுனையத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

நாட்டின் பொருளாதார இதயத்தை இந்திய நிறுவனமொன்றிற்கு விற்பனை செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ முயற்சித்து வருகின்றார். இதனை தடுத்து, எமது எதிர்கால தலைமுறையினருக்கு பாதுகாத்துக் கொடுப்பதற்காகவே நாம் இன்று இவ்வாறு ஒன்றுக்கூடியுள்ளோம். 1978 ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் அரசாங்கங்களை அமைத்து வருகின்றனர். ஆனால், அவை அரசாங்கமல்ல ஒவ்வொன்றும், ஒவ்வொரு கோத்திர  சமூகங்களே.

இந்நிலையில் மக்களினால் முதன் முதலாக உருவாக்கப்பட்ட கோத்திர சமூகம் .ஜே.ஆர். ஜயவர்தன என்ற கோத்திர சமூகமாகும். இவர்கள் எமது நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் தோட்டங்களை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்தார்கள். பின்னர் பிரேமதாச என்ற கோத்திர சமூகம் உருவாக்கினர். அவர்கள் நாட்டின் முக்கியமான தொழிற்சாலைகளை விற்பனை செய்தார்கள். அதனைத்தொடர்ந்து பண்டாரநாயகா, சந்திரிக்கா என்னும் கோத்திர சமூகத்தை அமைத்தார்கள். அவர்கள் எயார்லங்கா நிறுவனம், பால்மா உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களை விற்பனை செய்தனர்.

அதற்கும் பிறகு, விக்கிரமசிங்க என்ற கோத்திர சமூகம் உருவாக்கப்பட்டது. அது , அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்ததுடன் நிறுத்தாமல், கொழும்பிலுள்ள பெறுமதிமிக்க இடங்களை விற்பனை செய்வதற்கு திட்டம் தீட்டியிருந்தது. இதனைத் தொடர்ந்து ராஜபக்ஷ என்ற கோத்திர சமூகம் அமைக்கப்பட்டது. அது எமக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள துறைமுக நகரத்த்தை எதிர்வரும் 90 வருடங்கள் வரை சீனர்களுக்கு ஒப்படைத்துள்ளது. மேலும், சங்கரில்லா ஹோட்டலுக்கு முன்னால் காணப்பட்ட 10 ஏக்கர் நிலத்தையும் விற்பனை செய்துள்ளது.

இதயம் என்றால்,  அதற்கு நான்கு பகுதிகள் உள்ளது. அந்த ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொருவராக விற்பனை செய்து வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஒரு பகுதியையும், பிரிதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்னுமொரு பகுதியையும், விற்பனைச் செய்துள்ளார்கள். இதனால் எமக்கு ஒரு ஆழ்கடல் துறைமுகமொன்று இல்லை. பாரியளவிலான கப்பலொன்றை எம்மால் நிறுத்திவைப்பதற்கான வாய்ப்பு இல்லை.

ராஜபக்ஷர்களின் இந்த முயற்சியை தோல்வியடையச் செய்வோம். எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக அனைவரையும் எம்முடன் ஒன்றிணையுமாறு வேண்டுகோள்விடுக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50