ஹரின் பெர்ணான்டோவுக்கு உச்சகட்ட பாதுகாப்பிற்கு ஏற்பாடு - நாமல் ராஜபக்ஷ

Published By: Digital Desk 3

12 Jan, 2021 | 04:24 PM
image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்கு உச்சகட்ட பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றோம். காரணம் அவர் அங்கத்துவம் வகிக்கும் கட்சிக்குள் காணப்படும் பிரச்சினைகளால் ஹரினுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் கூட அந்த பழியை ஜனாதிபதியின் மீது சுமத்திவிடக் கூடும் என்று இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் கேட்க்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று எண்ணுகின்றேன். காரணம் அவர் அங்கத்துவம் வகிக்கும் கட்சிக்குள்ளேயே தற்போது பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவ்வாறு கட்சிக்குள் காணப்படும் பிரச்சினைகளில் ஹரின் பெர்னாண்டோ தலையிடுவாரானால் அதன் மூலம் அவருக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அந்த பழியை ஜனாதிபதியின் மீது சுமத்தக் கூடும்.

எனவே நாமும் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றோம். பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவுக்கு உச்சபட்ச பாதுகாப்பை வழங்குமாறு வலியுறுத்துகின்றோம். அவரது கட்சிக்குள் காணப்படும் உள்ளக பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு அவரது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம்.

ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரொருவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளதாகக் கூறியுள்ளார். சஜித் பிரேமதாசவின் வீடமைப்பு அமைச்சு குறித்த அறிக்கையை சமர்ப்பிப்பதற்கே எதிர்பார்க்கப்பட்டது. அதற்கமைய அவர்களுக்குள் சில சிக்கல்கள் காணப்படுவதாகத் தெரிகிறது. எனவே தான் ஹரினுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறுகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56