'உக்ரைன் சுற்றுலாப் பயணிகளால் கொரோனா கொத்தணி தோற்றம் பெறாது': அரசாங்கம் உத்தரவாதம்

Published By: J.G.Stephan

12 Jan, 2021 | 03:39 PM
image

(இராஜதுரை ஹஷான்)
உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளினால் கொவிட்-19 வைரஸ் கொத்தணி ஒருபோதும் தோற்றம் பெறாது. சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக செயற்படுத்தி மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் பாரிய பங்களிப்பு செலுத்துகிறது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை சேவையில் 30 இலட்சத்துக்கு மேற்பட்டோர்  ஈடுப்பட்டுள்ளார்கள். இவர்களின்  வாழ்க்கைத்தரம் பல வழிமுறைகளில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவே சுற்றுலாத்துறை சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆம் திகதி வரை உக்ரைன் நாட்டு சுற்றுலாப்பிரயாணிகள் 1,004 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்கள்,  இவர்களில் 3 பேர் மாத்திரம் கொவிட்-19வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். இவர்களும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆகவே உக்ரைன் நாட்டு சுற்றுலாப்பிரயாணிகளினால் கொவிட்-19 கொத்தணி ஒருபோதும் தோற்றம் பெறாது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தியுள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் அனைவருக்கும் பொதுவானது. சுற்றுலாப் பிரயாணிகளுக்கு எவ்வித சிறப்பு சலுகைகளும் இவ்விடயத்தில் வழங்கப்படவில்லை. ஆகவே உக்ரைன் பயணிகள் குறித்து எதிர்தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்கள் பொய்யானது.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின், சுற்றுலாத்துறையினை நெருக்கடியான நிலையில் ஆரம்பிக்க வேண்டும். குறுகிய காலத்தில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் அபிவிருத்தி செய்யப்படும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் எழுந்துள்ள சவால்களை வெற்றிக் கொள்வது கட்டாயமாகும் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19