வவுனியா நகர கோட்ட பாடசாலைகளுக்கு நாளை பூட்டு

Published By: J.G.Stephan

12 Jan, 2021 | 02:41 PM
image

வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நகர கோட்டத்திற்குட்பட்ட  42 பாடசாலைகளை நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற அவசர கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

வவுனியா நகரை சேர்ந்த 2,000 பேரினது பி.சி.ஆர் முடிவுகள் வரும்வரைக்கும், வவுனியா நகரை அண்மித்த நெளுக்குளம், தாண்டிக்குளம், பூந்தோட்டம், மூன்றுமுறிப்பு, மடுக்கந்தை ஆகிய பகுதிகளில் சோதனை நிலையங்களை அமைத்தும் அதற்குட்பட்ட  பகுதிகளுக்குள் முடக்க நிலைமையை ஏற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதனை கருத்தில் கொண்டு, வவுனியா நகர கோட்டத்திற்குட்பட்ட 42 பாடசாலைகளை நாளையதினம்(13.01.2021) மூட தீர்மானித்துள்ளதுடன், செட்டிகுளம் கோட்டம் மற்றும் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட இரண்டு கோட்ட பாடசாலைகளினதும் கல்வி செயற்பாடுகளை வருகைதரும் ஆசிரியர்களை கொண்டு நடாத்துவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இயங்கும் பாடசாலைகளுக்கு, முடக்கப்பட்ட பகுதியில் இருந்து செல்லும் ஆசிரியர்கள் கடமைக்குச் செல்ல தேவையில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30