பிரதான பொலிஸ் பரிசோதகர்களாக சட்டத்தரணிகளை நியமிக்க நடவடிக்கை - அலிசப்ரி

Published By: Digital Desk 4

11 Jan, 2021 | 09:06 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

பொது மக்களுக்கு சட்டத்தை நெருக்கமாக்குவதற்கும் பொலிஸாரினால் பெற்றுக்கொடுக்கப்படும் சேவையை மேலும் செயற்திறமையாக்கும் நோக்கிலும்  150 சட்டத்தரணிகளை பிரதான பொலிஸ் பரிசோதகர்களாக நியமிக்க நீதி அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்  என நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சுப் பதவியை ஜனாதிபதி வகிப்பதில் சிக்கலில்லை! நீதி அமைச்சர்  ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி திட்டவட்டம்! | Virakesari.lk

இதுதொடர்பாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீதி அமைச்சர் அலிசப்ரி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்விடம் மேற்கொண்ட கோரிக்கைக்கமைய பொலிஸ் திணைக்களத்தினால் பொது மக்களுக்கு சட்டரீதியிலாக வழங்கப்படும் சேவையை மேலும் செயற்திறமையுடன் வழங்கும் நோக்கில் பொலிஸ் திணைக்களத்துக்கு பிரதான பொலிஸ் பரிசோதகர்களாக சட்டத்தரணிகள் 150பேரை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

இதுதொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று நீதி அமைச்சர் அலிசப்ரி தலைமையில் நீதி அமைச்சில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ராேஹண, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சட்டத்தரணி ருவன் குணசேகர, ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி சில்வா மற்றும் நீதிஅமைச்சின் மேலதிக செயலாளர் பியுமன்தி பீரிஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவிக்கையில், 

150 சட்டத்தரணிகளை பிரதான பொலிஸ் பரிசோதகர்களாக பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள அமைச்சரவையின் அனுமதி கிடைத்ததுடன் அவர்களுக்கு நேர்முகப்பரீட்சை மேற்கொள்ளப்படும். அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள், அவர்களுக்கு இருக்கும் திறமையின் பிரகாரம் பதவி உயர்வுகளை பெற்றுக்கொள்ள முடியுமாகின்றது.

இவ்வாறு இணைத்துக்கொண்ட பின்னர் அவர்களை 9மாகாணங்களுக்கும் சேவைக்கு இணைத்துக்கொள்ள இருப்பதுடன் அவர்களுக்கு சட்டம் மற்றும் பொலிஸ் சேவை தொடர்பில் விசேட பயிற்சி ஒன்றையும் பெற்றுக்கொடுக்க இருக்கின்றோம். அவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் இணக்கம் தெரிவித்திருக்கின்றது.

அத்துடன் பிரதான பொலிஸ் பரிசோதகர்களாக நியமிக்கப்படும் இந்த சட்டத்தரணிகள் தமிழ் மொழி தொடர்பில் விசேட அறிவை பெற்றிருப்பதை விசேட தகுதியாக கருதப்படவேண்டும். 

அதன் மூலம் தமிழ் மொழியை பேசும் மக்களை வெற்றிகொள்ள முடியுமாகின்றது. பொது மக்களுக்கு சட்டத்தை நெருக்கமாக்குவதற்கும் பொலிஸாரினால் பெற்றுக்கொடுக்கப்படும் சேவையை மேலும் செயற்திறமையாக்குவதுமே இதன் நோக்கமாகும் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08