கொழும்புக்கு எவரும் வரவேண்டாம் - தொழில் ஆணையாளர் நாயகம் கோரிக்கை

Published By: Digital Desk 4

11 Jan, 2021 | 08:25 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகளை பெற்றுக்கொள்வதற்கு மற்றும் அதனை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிப்பதற்காக கொழும்பு நாரஹேன்பிடி தொழிலாளர் செயலகத்துக்கு வருவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என தொழில் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

ஊழியர் சேமலாப நிதியம் Archives - Sri Lanka Tamil News - Newsfirst | News1st  | newsfirst.lk | Breaking

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொவிட் தொற்று நிலைமை பரவும் நிலைமையுடன் பொது மக்கள் பாரியளவில் கொழும்பு பிரதான காரியாலயத்துக்கு வருவதை தவிர்க்கும் நோக்கில் ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகளை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் நாடுபூராகவும் அமைக்கப்பட்டிருக்கும் மாவட்ட மற்றும் வலய தொழிலாளர் காரியாலயங்களுக்கு பகிந்தளிக்கப்பட்டிருக்கின்றன. 

அத்துடன் மாவட்ட வலய தொழிலாளர் காரியாலயங்களில் பெற்றுக்கொடுக்கப்படும் ஊழியர் சேமலாப நிதிய நன்மைகளை பெற்றுக்கொள்ளும் விண்ணப்பப்படிவங்கள், அந்த காரியாலயங்கள் ஊடாகவே  நேரடியாக இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பிவைக்க தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அதனால் தமது விண்ணப்பங்களை மாவட்ட அல்லது வலய காரியாலயங்களுக்கு வழங்குவதன் மூலம் நிதி பெற்றுக்கொள்வதில்  எந்தவித காலதாமதமும் ஏற்படாது. அவ்வாறான காலதாமதம் ஏற்படும் என்ற சந்தேகம் அல்லது பீதியை ஏற்படுத்திக்கொள்ளவேண்டாம். 

அத்துடன் கொழும்பு பிரதேசத்தில் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய ஒருவரின் ஊழியர் சேமலாப நிதியை பெற்றுக்கொள்ளும் போது தற்போது, அந்த நிறுவனம் மூடி இருந்தால், அந்த நபர் மாத்திரம் தமது விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிப்பதற்காக தொழில் திணைக்களத்தின் கொழும்பு தொழிலாளர் பொதுச் செயலாளர் காரியாலயத்துக்கு வரவேண்டும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04