சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றில் வீழ்ச்சி - சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர்

Published By: Gayathri

11 Jan, 2021 | 05:26 PM
image

(செ.தேன்மொழி)

சிறைச்சாலைகளில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது.

அதற்கமைய நேற்றைய தினம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள விளக்கமறியல் கைதியொருவருக்கு மாத்திரமே வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவடைந்தே வருகின்றது.

அதற்கமைய நேற்று திங்கட்கிழமை தனிமைப்படுத்தப்பட்டுள்ள விளக்கமறியல் கைதி ஒருவருக்கு மாத்திமே வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 129 சிறைச்சாலை அதிகாரிகளும், 474 ஆண் சிறைக்கைதிகளும், 11 பெண் சிறைக்கைதிகளும், 3,410 ஆண் விளக்கமறியல் கைதிகளும், 234 பெண் விளக்கமறியல் கைதிகளும் உள்ளடங்களாக,  4,258 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 876 பேர் வெலிக்கடைச் சிறைச்சாலையிலும், 853 பேர் மெகசின் சிறைச்சாலையிலும்,  809 பேர் மஹர சிறைச்சாலையிலும்,  424 பேர் கொழும்பு விளக்கமறியல் சிறைசாலையிலும், 348 பேர் நீர்கொழும்பு சிறைச்சாலையிலும் சேர்ந்தவர்கள்.

இதன்போது, வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 121 சிறைச்சாலை அதிகாரிகள் குணமடைந்துள்ளடன், 3 ஆயிரத்து 777 கைதிகளும் இவ்வாறு குணமடைந்துள்ளனர். 

அதற்கமைய வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் 8 அதிகாரிகள் சிகிச்சைப் பெற்று வருவதுடன், 344 கைதிகள் தொடர்ந்து சிகிச்சைப்  பெற்று வருகின்றனர். 

இதன்போது சிறைச்சாலைகளில் வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் 8 பேரே இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39