அச்சம் மிகுந்த சூழ்நிலையில் தமிழர்கள் வாழ்கின்றனர் - ஸ்ரீதரன் எம்.பி.

Published By: Gayathri

11 Jan, 2021 | 05:23 PM
image

இம் மண்ணிலே நாம் தமிழ்த்தேசிய இனமாக எங்கள் அடையாளத்தை தொலைத்து விடாமல் நிமிர்ந்து வாழ்கின்ற இனமாக  உணர்வுகள் சூழ்ந்த இனமாக இந்த மண்ணிலே நாம் வாழவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார். 

அடையாளத்தை தொலைத்த மனிதர்களாக அடையாளம் அற்ற மனிதர்களாக நாம் வாழவேண்டிய காலம் வருமோ அல்லது யார் யாரெல்லாம் எப்படி எம்மை ஆளப்போகிறார்கள் என்கிற அச்சம் மிகுந்த சூழ்நிலையில்தான் நாம் இருக்கிறோம் எனவும் அவர் கூறினார்.

உதயநிலா விளையாட்டுக்கழகத்தினால் நடத்தப்பட்ட உதயநிலா பிரீமியர் லீக் மற்றும் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மிக முக்கியமாக இன்றைய காலகட்டம்  என்பது எல்லோருக்குமே ஒரு அச்சம் மிகுந்த சூழ்நிலையை தந்திருக்கிறது. 

இன்று என்ன நடக்கிறது நாளை, நாளை மறுதினம் என்ன நடக்கும் என்ற கேள்விகளோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

அடையாளத்தை தொலைத்த மனிதர்களாக அடையாளம் அற்ற மனிதர்களாக நாம் வாழவேண்டிய காலம் வருமோ? அல்லது யார் யாரெல்லாம் எப்படி எம்மை ஆளப்போகிறார்கள் என்கிற அச்சம் மிகுந்த சூழ்நிலையில்தான் நாம் இருக்கிறோம். 

இந்த வேளையில் நான் இளைஞர்களை கோருவது இம் மண்ணிலே நாம் தமிழ்த்தேசிய இனமாக, எங்கள் அடையாளத்தை தொலைத்து விடாமல் நிமிர்ந்து வாழ்கின்ற இனமாக, உணர்வுகள் சூழ்ந்த இனமாக இந்த மண்ணிலே நாம் வாழவேண்டும்.

இன்று (நேற்று) கூட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் மாணவன் ஒருவன் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். 

அந்த மாணவனிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, 

'உணர்வு என்பது என் உள்ளத்தில் மட்டும் இருந்து வந்தால் போதுமானது, தாய் தந்தையிரிடம் கேட்கவேண்டும் என்று நான் யோசிக்கவில்லை. இங்கே எனது இனம் அழிக்கப்படுகிறது, என் இனத்தின் அடையாளங்கள் தொலைக்கப்படுகிறது,  அதனால் இந்தப் போராட்டத்தில் குதித்து இருக்கின்றேன்' என்று குறிப்பிட்டிருந்தான். 

இந்த செய்தியெல்லாம் நாங்கள் இன்னும் எத்தனை இடர்களை சந்திக்கப்போகின்றோம்.சிங்கள பௌத்த அரசுகளால் சூழப்பட்டுள்ள இந்த நிலை மிகப் பெரிய கேள்விகளை எங்கள் முன்னால் வைத்திருக்கிறது. இவற்றுக்கெல்லாம் அஞ்சாது சோரம் போகாதவர்களாக வாழவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12