நாட்டில் மழையுடனான காலநிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் 

Published By: Digital Desk 4

11 Jan, 2021 | 05:21 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் எதிர்வரும் நாட்களுக்கு மழையுடனான காலநிலை தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் போது  வடக்கு , கிழக்கு , வட-மத்திய மாகாங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் , சில பகுதிகளில் சிறியளவிலான வெள்ள அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருவலகஸ்வெவ, வணாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவுகளில் கலா ஓயா பெருக்கெடுக்கும் என்பதால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இன்று காலை 11.30 மணியளவில் இராஜாங்கனை நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் அனைத்தும் திறந்து விடப்பட்டிருந்த நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கடற்பிரதேசங்களில் புத்தளம் தொடக்கம் திருகோணமலை வழியாக காங்கேசன்துறை வரையான பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே கடற்றொழிலில் ஈடுபடுவபர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலையுடன் பனிமூட்டம் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு , கிழக்கு , வட-மத்திய ஆகிய மாகாணங்களில் 150 மில்லி மீற்றரை விட அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். ஏனைய மாகாணங்களில் 100 மில்லி மீற்றரை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22