அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவை எதிர்வரும் ஆகஸ்ட் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டிருந்த பியசேனவின் சாரதியை 10 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் 3 இலட்சம் ரூபா சரீர பிணையிலும் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

அரச வாகனத்தை திருப்பி கையளிக்கவில்லை என்றக் குற்றச்சாட்டில் பியசேன கடந்த வாரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை குறித்த அரச வாகனம் பொலிஸாரல் கைப்பற்றப்பட்டதுடன் சாரதி கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.