'கே.ஜி.எஃப் 2' டீஸருக்கு மாபெரும் வரவேற்பு

Published By: Vishnu

11 Jan, 2021 | 01:38 PM
image

'கே.ஜி.எஃப் 2' திரைப்படத்தின் டீஸருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

'கே.ஜி.எஃப்' திரைப்படத்தை தொடர்ந்து 'கே.ஜி.எஃப் 2' தயாரிப்பில் உள்ளது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'கே.ஜி.எஃப்' படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால், 'கே.ஜி. எஃப் 2' படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. முதல் பாகத்தைப் போலவே, இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு, 'கே.ஜி.எஃப் 2' படத்தின் டீஸர் ஜனவரி 07 ஆம் திகதி பல மொழிகளுக்கும் ஒரே டீஸர் என்பதுபோல் திட்டமிட்டு வெளியிடப்பட்டது. 

தற்சமயம் இதற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்படி இந்த டீஸரானது ஸ்ட்ரீமிங் தளங்களில் 125 மில்லியன் பார்வைகளைக் கடந்து, பல்வேறு டீஸர் சாதனைகளை முறியடித்தது.

இதனை முன்னிட்டு 'கே.ஜி.எஃப் 2' இன் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பேல் பிலிம்ஸ் ஒரு சிறப்பு சுவரொட்டியை இன்று வெளியிட்டுள்ளது. 

அதில் டீஸர் 125 மில்லியன் பார்வைகளைக் கொண்டிருப்பதைத் தவிர, 6 மில்லியனுக்கும் அதிகமான விருப்புக்களை பெற்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35