பாகிஸ்தானுக்கு வரலாற்று சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் இங்கிலாந்து மகளிர் அணி

Published By: Vishnu

11 Jan, 2021 | 11:33 AM
image

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியானது ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

ஒக்டோபரில் பாகிஸ்தானில் நடைபெறும் இரு அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச தொடருக்கு இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.

வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்து மகளிர் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து மகளிர் அணியினர் மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு இருபதுக்கு: 20 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

இந்த சுற்றுப் பயணம் குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்டின் நிர்வாக இயக்குனர் கிளேர் கானர்,

இந்த வரலாற்று அறிவிப்பை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இதற்கு முன்னர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ததில்லை. எனவே இது எங்கள் வரலாறு மற்றும் பயணத்தின் மற்றொரு முக்கியமான படியாகும் என்றார்.

இதேவேளை இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியினரும் 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tour itinerary

14 October: 1st T20I, National Stadium, Karachi

15 October: 2nd T20I, National Stadium, Karachi

18 October: 1st ODI, National Stadium, Karachi

20 October: 2nd ODI, National Stadium, Karachi

22 October: 3rd ODI, National Stadium, Karachi

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35