பாதுகாப்பு செயலாளர் என்ற கதாபாத்திரத்தையே மகாசங்கத்தினர் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் - ஜனாதிபதி

Published By: Digital Desk 3

11 Jan, 2021 | 10:52 AM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி என்ற கதாபாத்திரத்தை விட பாதுகாப்பு செயலாளர் என்ற கதாபாத்திரத்தையே மகாசங்கத்தினர் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். தேவையாயின் பாதுகாப்பு செயலாளர் என்ற கதாபாத்திரத்திலும் செயற்படதயார் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் நோக்கங்களின்றி நாட்டு மக்களுக்கு சேவையாற்ற தயராக உள்ளேன். அரசியல் நோக்கங்களுடன் செயற்படதயாரில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை அம்பாறை உஹனவில-லாத்துகல கிராமத்தில் இடம்பெற்ற 'கிராமத்துடன் உரையாடல்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்பட தயாரில்லை. அரசியல் பழிவாங்கள் இல்லாமல் சிறந்த முறையில் செயற்பட தயாராக உள்ளோம். சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டவர்கள்.  சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இதனை எதிர்தரப்பினர் தெரிந்துக் கொள்ள மறுக்கிறார்கள். எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின்பெர்ணான்டோ அண்மையில் பாராளுமன்றில் ஆற்றிய உரை ஏற்றுக் கொள்ள முடியாது.

கடந்த கால முறைமைகளை விட வித்தியாசமான முறையில்  செயற்பட எதிர்பார்த்துள்ளோம். மகாசங்கத்தினரும் இதனையே எதிர்பார்க்கிறார்கள். அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி செயற்பட தயாராகயில்லை. நந்தசேன கோத்தாபயவின் 2 கதாபாத்திரங்களில் ஜனாதிபதி என்ற கதாபாத்திரம் வேண்டாம். முன்பு இருந்த பாதுகாப்பு செயலாளர் என்ற கதாபாத்திரம் வேண்டும் என மகாசங்கத்தினர் கோருகிறார்கள். சற்று இறுக்கமாக செயற்பட வேண்டும் எண்ணுகின்றனர். அதனையும் செய்ய முடியும். கடினமான முறையில் செயற்பட்டால் இறுக்கமாகவும் என்னால் செயற்பட முடியும்.

பித்தளை சந்தியில் குண்டுத்தாக்குதலை நடத்தி பிரபாகரன் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தார். நான் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலத்தில் நாயை போல் விடுதலை புலிகள் அமைப்பை நந்திக்கடலில் வீழ்த்தினோம். இம்முறைமைக்கும் கொண்டு வர முடியும். அனைத்து சவால்களையும் வெற்றிக் கொள்ளும் கதாபாத்திரம் நான். நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதே எனது நோக்கம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51