இலங்கையின் முதற் தர தேசிய வங்­கி­யாக 1939ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி உத­ய­மா­கி­யது தான் நாளைய உலகை வெற்றி கொள்ளும் நவீ­னத்­துவ வளர்ச்­சியின் அடை­யா­ள­மாக இன்று திகழ்ந்து கொண்­டி­ருக்கும் இலங்கை வங்கி.

இது தோற்றம் பெற்ற காலத்தில் ஏறத்­தாழ பதி­னாறு வங்­கிகள் இயங்­கிக்­கொண்­டி­ருந்­தன. இவை அனைத்­தி­னது சேவை­களும் அக்­கா­லத்தில் நம் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தின் முது­கெ­லும்­பாகத் திகழ்ந்த பெருந்­தோட்­டத்­து­றைக்கு வழங்­கப்­பட்­டன. இதனால் கிரா­மி­யத்­து­றையை 80% மேற் கொண்­டி­ருந்த நம் நாட்டில் இவ்­வங்­கி­களின் சேவைகள் கிரா­மி­யத்­து­றையைச் சென்­ற­டை­ய­வில்லை. இதனைக் கருத்­திற்­கொண்ட அரசு 1961ஆம் ஆண்டு இலங்கை வங்­கியை அர­சு­ட­மை­யாக்கி அரச வங்­கி­யாக மாற்­றி­யது. இதனைத் தொடர்ந்து இலங்கை வங்­கியின் கிளைகள், நக­ரங்கள், பட்­டி­னங்கள் என கிரா­மங்­க­ளுக்கு கூட விஸ்­த­ரிக்­கப்­பட்டு திறக்­கப்­பட்­டன. இதனால் இலங்கை வங்­கியின் சேவைகள் விவ­சா­யத்­துறை, கைத்­தொ­ழிற்றுறை, வியா­பா­ரத்­துறை, சேவைத்­துறை என பல­த­ரப்­பட்­ட­வர்­க­ளுக்கும் கிடைக்­க­லா­யிற்று. இதன் மூலம் இலட்­சோப இலட்சம் மக்கள் பயன்­பெ­ற­லா­யினர். இதனால் எண்­ப­து­களில் இலங்கை வங்கி 'தேசத்தின் வங்­கி­யாளர்" எனும் வர்த்­தக நாமத்­திற்­கு­ரி­ய­தா­யிற்று. இது இன்று இலங்­கையின் முதற் தர வங்­கி­யாகத் தலைநிமிர்ந்து நிற்­கின்­றது.

இலங்கையிலுள்ள அனைத்து நிதி நிறு­வ­னங்­க­ளிலும் ஆகக்­கூ­டு­த­லான சொத்­துக்கள் (ட்ரில்­லி­ய­னுக்கு மேல்) ஆகக்­கூ­டு­த­லான வைப்­புகள் (ட்ரில்­லி­ய­னுக்கு மேல்) ஆகக்­கூ­டு­தா­லான கடன் வச­திகள் அதி உச்ச இலாபம் என்­ப­ன­வற்றைக் கொண்­ட­தாக விளங்­கு­கி­றது. இத­னு­டைய இலா­பத்தில் கணி­ச­மான அளவு பகு­தியைத் தனது சமு­தாய நிறு­வ­னப்­பொ­றுப்பை வெளிப்­ப­டுத்தும் பல்­வேறு நல­னோம்பு திட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­வது இதன் இன்னோர் சிறப்­பம்­ச­மாகும்.

ஆரம்ப நாட்­களில் மனித சக்­தியை முழுக்க முழுக்க நம்­பி­யி­ருந்த நம் வங்கி காலத்­திற்கு காலம் உல­கி­யல்­ரீ­தியில் ஏற்­படும் மாற்­றங்­க­ளுக்­கேற்ப தன்னை இசை­வு­ப­டுத்தி அம்­மாற்­றங்­களை வெற்­றி­க­ர­மாக எதிர்­கொள்ள முடிந்­தது. பூகோள­ம­ய­மாதல் தகவல் தொழில்­நுட்­பத்தின் வளர்ச்சி என்­ப­ன­வற்றின் சவால்­க­ளையும் இதனால் இல­கு­வாக இலங்கை வங்கி வெற்றி கொண்­டது. இன்று வைப்பு புத்­த­கங்­க­ளி­லி­ருந்து டிஜிற்றல் வங்­கி­யியல் வரை­யி­லான தொழில்­நுட்ப வளர்ச்­சியை இலங்­கை­யர்கள் பயன்­ப­டுத்­தவும் அதன் மூலம் பயன்­பெ­றவும் வழி சமைக்க முடிந்­தது. அது மட்­டு­மன்றி தொழில்­நுட்­பத்தின் சம­கால வளர்ச்­சியின் அடை­யா­ளங்­க­ளாகத் திகழும் 'சிமாட்சோன்" இணைய வழி­ வங்­கிச்­சேவை, மொபைல் வங்­கிச்­சேவை, சூழ­லுக்கு பாது­காப்­பான வங்­கிச்­சேவை போன்ற பல்­வேறு சேவை­களை அறி­முகம் செய்து வங்­கித்­து­றையில் புரட்­சி­யா­ள­னாக விளங்­கு­கின்­றது.

நம் நாட்டை பொறுத்­த­வ­ரையில் 77 ஆண்­டுகள் துடிப்­புடன் செயற்­பட்டு நின்று நிலைப்­பது என்­பது சாதா­ரண ஒரு விட­ய­மல்ல. இதனால் இவ்­வே­ளையில் இரு­சா­ராரை நினை­வு­கூர வேண்­டி­யது எமது கட­மை­யாகும்.

1.எமது முது­கெ­லும்­பா­கத்­தி­கழும் எமது பெறு­மதி சார் வாடிக்­கை­யா­ளர்கள்.

2.வங்­கிக்­காக தம்மை முழு­மை­யாக அர்ப்­ப­ணித்த ஓய்வூதியம் பெற்ற மூத்த வங்­கி­யா­ளர்கள்..

வாடிக்­கை­யாளர் இன்றேல் நாம் இல்லை. இதனால் நாம் சிறந்த சேவை­களை அவர்­களின் எதிர்­பார்­ப்­புக்கி­ணங்க வழங்கி வரு­கின்றோம். எமது நம்­பிக்கை, நாணயம் என்­ப­ன­வற்­றிற்கு மதிப்­ப­ளித்து எமக்கு பக்க பலமாய் விளங்­கு­கின்ற எமது பெறு­மதி வாய்ந்த வாடிக்­கை­யா­ளர்­களை நாம் தலை வணங்கி நன்றி கூறு­கின்றோம்.

அதே­வேளை இலங்கை வங்கி இந்த அசுர வளர்ச்­சியை அடைந்­தி­ருக்­கி­ற­தென்றால் அதற்கு அச்­சா­ணி­யாக விளங்­கி­ய­வர்கள் எமது மூத்த வங்­கி­யா­ளர்­களேயாவர்

அவர்­களின் அர்ப்­ப­ணிப்­பான சேவை­களும் செயற்­பா­டு­களும் மதிப்­பிட முடி­யாத பெறு­ம­தி­க­ளாகும்.

இன்று இலங்கை வங்­கியில் கட­மை­பு­ரியும் 8000ற்கு மேற்பட்ட ஊழியர்கள் தொழில் திருப்தியுடன் கடமைபுரிகின்றனர் என்றால் இதற்கு காரணம் அவர்களின் வழிகாட்டல்கள், ஆற்றுப்படுத்தல், வென்றெடுத்துத் தந்த சலுகைகள் என்பனவே அடிப்படை.