இந்தோனேஷிய விமானம் விபத்துக்குள்ளான இடத்தை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தகவல்

Published By: Vishnu

10 Jan, 2021 | 07:55 AM
image

நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே போயிங் 737 பயணிகள் விமானம் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளானதாக கூறப்படும் இடத்தை கண்டுபிடித்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீவிஜய ஏர் ஜெட் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.ஜே. 182 என்ற விமானமானது ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட சிறிதி நேரத்தின் பின்னர் கட்டுப்பாட்டாவர்களுடனான ரேடார் தொடர்புகளை இழந்ததாக போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இது இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் மேற்கு காளிமந்தன் மாகாணத்தின், ஜகார்த்தாவிலிருந்து பொன்டியானாக் நோக்கி பயணித்துக்துக் கொண்டிருந்தபோது காணாமல்போயுள்ளது.

போர்னியா தீவின் மேற்குப் பகுதியில் உள்ள இந்த நகருக்கு செல்வதற்கான பயண நேரம் வழக்கமாக ஒன்றரை மணி நேரம்.

இந் நிலையில் மேற்படி விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு அந் நாட்டு நேரப்படி பிற்பகல் பகல் 2.40 மணிக்கு (கிரீன்விச் சராசரி நேரம்-7.40) துண்டிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட விமானம் 26 வருடம் பழைமையான போயிங் 737-500 ரகம் என்று இந்தோனேசிய விமான சேவையான ஸ்ரீவிஜயா ஏயர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தியோடோரா எரிகா தெரிவித்துள்ளார். 

எஸ்.ஜே. 182 என்ற இந்த விமானம் இந்தோனேஷிய நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 2:36 மணிக்கு ஜகர்த்தாவிலிருந்து புறப்பட்டுள்ளது. 

சில நிமிடங்கள் கழித்து 2:40 மணிக்கு, விமானத்துடன் இறுதி தொடர்பு பதிவு செய்யப்பட்டதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந் நிலையில் தற்போது விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படும் இடத்தை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் கூறுவதுடன் கடற்படை வீரர்கள் உள்ளிட்ட மீட்பு படையினர் குறித்த ஸ்தளத்திற்கு அனுப்பப்பட்டும் உள்ளனர்.

விமானத்திலிருந்து சிதவைடந்ததாக கூறப்படும் பாகங்களை கண்‍டெடுத்துள்ளதுடன், தற்போது அதனை வைத்து ஆய்வுகளையும் குறித்த கடற்பரப்பில் தேடல்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

தேடல் மற்றும் மீட்பு முயற்சிகள் சனிக்கிழமை இரவில் இடைநிறுத்தப்பட்டன, ஆனால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீண்டும் அத் தேடல் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10