யாழ்ப்பாணம் சுன்னாகம் உள்ளிட்டபகுதிகளில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ள வழக்கில் மத்திய அரசின் சுற்றாடல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பிரதிப் பணிப்பாளரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு மல்லாகம் நீதிமன்று நேற்று உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பொலிஸ் அத்தியட்சர் ஊடக அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.