அறநெறி பாடசாலைகள் ஆரம்பம் ; புத்தசாசன , மத விவகாரங்கள் அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

Published By: Digital Desk 4

08 Jan, 2021 | 05:11 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மேல்மாகாணம் உள்ளிட்ட ஏனைய தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த பிரதேசங்களில் உள்ள அறநெறி பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகளை எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக செயற்படுத்தும் பொறுப்பு குறித்த அறநெறி பாடசாலையின் நிர்வாக பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளது என புத்தசாசன மத விவகாரங்கள் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

கொவிட்-19 வைரஸ் தாக்கததின் காரணமாக அறநெறி பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டன. உரிய காலத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்ட மத விவகாரம் தொடர்பான பரீட்சைகள் அனைத்தும்  திகதி குறிப்பிடப்படாமல் பிற்போடப்பட்டன.

அறநெறி பாடசாலைகளை திறப்பது குறித்து பலதரப்பட்ட மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள  பகுதிகளை தவிர்த்த ஏனைய பகுதிகளில் உள்ள இந்து, முஸ்லிம், பௌத்த மற்றும் கத்தோலிக்க மதங்களின் அறநெறி பாடசாலை  கற்றல் நடவடிக்கைகளை  எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்த சுகாதார  தரப்பினர் வழியுறுத்தியுள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை   கட்டாயம்   செயற்படுத்தும பொறுப்பு குறித்து அறநெறி பாடசாலை நிர்வாக பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 அத்துடன் பிரதேச சுகாதார பரிசோதகர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுவார்கள். பிற்போடப்பட்டுள்ள மத விவகார பரீட்சைகளை  விரைவாக நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மேல்மாகணத்திலும் ஏனைய தனிமைப்படுத்தல் பகுதிகளிலும் பாதுகாப்பான முறையில்  பரீட்சைகளை நடத்த  சுகாதார தரப்பினரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27