முன்னாள் போர்க்கால பாலியல் அடிமைகளுக்கு இழப்பீடு வழங்குமாறு தென் கொரியா ஜப்பானுக்கு உத்தரவு

Published By: Vishnu

08 Jan, 2021 | 11:49 AM
image

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் இராணுவ விபச்சார விடுதிகளில் பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்த பெண்களுக்கு இழப்பீடு வழங்குமாறு தென் கொரிய நீதிமன்றம் ஜப்பானுக்கு உத்தரவிட்டது. 

அதன்படி ஜப்பானிய அரசாங்கத்திற்கு 100 மில்லியன் வோன் (91,000 அமெரிக்க டொலர்) உயிர் பிழைத்த ஒவ்வொரு பெண்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் செலுத்துமாறு சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஜோ பைடன் ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ள நிலையில் அமெரிக்க நட்பு நாடுகளுக்கிடையே பதற்றத்தை தூண்டும் ஒரு முக்கிய முடிவாக இது கருதப்படுகிறது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜப்பானின் வெளியுறவு அமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரியான டேகோ அகிபா, தென் கொரிய தூதர் நம் குவான்-பியோவை அமைச்சுக்கு வரவழைத்து எதிர்ப்புத் தெரிவித்ததுடன், இந்த தீர்ப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவரிடம் கூறினார்.

ஜப்பானிய இராணுவத்தினருக்கான போர்க்கால பாலியல் அடிமைகளால் டோக்கியோவுக்கு எதிராக தென் கொரியாவில் நடந்த முதல் சிவில் சட்ட வழக்கு இதுவாகும்.

கொரிய தீபகற்பத்தில் 1910-45 காலனித்துவ ஆட்சியின் போது ஜப்பானிய தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்களில் பணிபுரிய கட்டாயப்படுத்தப்பட்ட கொரியர்களுக்கு ஜப்பான் இழப்பீடு வழங்கக் கோரி 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தென் கொரிய நீதிமன்றத் தீர்ப்புகளின் தொடர்ச்சியாக பதட்டங்கள் மேலும் அதிகரித்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17